Saturday, January 25, 2020

பொலிக பொலிக பொலிக - Of Precognition or Clairvoyance in Srivaishnava sampradayam

தமிழ் மாமுனி திக்கு சரண்யம் என்றவர்களாலே க்வசித் க்வசித்து என்று, இவர் ஆவிர்ப்பாவம் 'கலியும் கெடும்' போலே சூசிதம் - ஆசார்ய ஹ்ருதயம் 91

க்ருதாதிஷூ நராராஜன் கலாவிச்சந்தி சம்பவம்
கலௌகலு பவிஷ்யந்தி நாராயண பாராயண:
க்வசித் க்வசித் மஹாராஜ திராவிடேஷு ச பூரிச
தாமிரபரணி நதீ யத்ர க்ருதமாலா பயஸ்வினி
காவேரீச மஹாபாகா பிரதீசீச மஹாநதீ
யேபிபந்தி ஜலம் தாஸாம் மனுஜா மனுஜேஸ்வர
தேஷாம் நாராயணே பக்தி: பூயஸீ நிருபத்ரவா  -பாகவதம் 11, 5:38-39

ஓ அரசனே! க்ருத யுகத்தில் உள்ளவர் கலியுகத்தில் பிறக்கும் பிறவியினை விரும்புகிறார்கள். கலியுகத்தில் நாராயணனே அடையத்தக்க பரம்பொருள் என்று எண்ணுகின்ற  பெரியோர்கள் அங்கும் இங்கும் பிறப்பார்கள். தமிழ் தேசத்தில் தாமிரபரணி, க்ருதமாலா, பாலாறு, காவேரி என்னும் இவ்வாறுகள் ஓடும் இடங்களில் பிறப்பார்கள். எந்த மனிதர்கள் அந்த நதிகளின் நீரை குடிக்கின்றனரோ அவர்களுக்கு நாராயணனிடத்தில் மிகுந்த பக்தி உண்டாகின்றது. - Shri BR Purushoththama Naidu - Tamil Translation of Swami Mamunigals vyakyanam for Acharya Hrudayam.

முதலில் தாமிரபரணி  என்று நம்மாழ்வாரின் அவதார  ஸ்தலத்தை சொல்வதால் நம்மாழ்வாரின் அவதாரம் முக்காலமும் உணர்ந்த ஸ்ரீ சுக மகரிஷியால் முன்கூட்டியே தெரிவிக்கப்படடது!

இதைப்போலவே மயர்வற மதிநலம் அருளப்பெற்ற ஆழ்வாரும் "கலியும் கெடும் கண்டு கொண்மின் கடல்வண்ணன் பூதங்கள் மண்மேல் மலியப் புகுந்து இசைபாடி ஆடி உழிதரக் கண்டோம்" என்று எம்பெருமானின் அடியார்களின் வரும் காலத்தில் மலிந்து இருப்பதை தெரிவிக்கிறார்.

மாமுனிகள் இந்த சூத்ர வ்யாக்யானத்தில் "திருமங்கை ஆழ்வாரும், எம்பெருமானாரும்" அவதாரம் செய்யப்போவதை தெரிவிக்கிறார் என்றருளுகிறார்.

ஸ்வாமி இப்படி குறிப்பிட்டு வ்யாக்யானமிட்டது இதனால் இருக்கலாமோ?

1. திருவாய்மொழியாகிற  இருந்தமிழ்நூற்புலவன் திருமங்கை ஆழ்வாராகையாலும்

2. இதே பொலிக பொலிக பொலிக பதிக பலப் பாசுரத்தில்.

கலியுகம் ஒன்றும் இன்றிக்கே தன் அடியார்க்கு அருள் செய்யும் - கலயாமி கலித்வம்சம் கவிம் லோக திவாகரம்

கலிவயல் தென்னன்  குருகூர் காரி மாறன்சடகோபன்   - கலி மிக்க செந்நெல்  கழனி குறையல் கலைப் பெருமான்

ஒலிபுகழ் ஆயிரத்து இப்பத்தும் - கலியன் ஒலிமாலை
என்று திருமங்கை ஆழ்வாரையும்

அந்த ஒலிமிக்க பாடலை உண்டு தன் உள்ளம் தடித்து அதனால் வலி மிக்க சீயம் இராமானுசன் ஆகையாலும் குறையல் பிரானடிக்கீழ் விள்ளாத அன்பன் இராமானுசன் என்பதாலும் எம்பெருமானரையும் குறிப்பிட்டு தெரிவித்துள்ளார்.

Wednesday, June 21, 2017

அரங்கம் என்னும் ஊர் - Part 4

திருமழிசை  பிரான்   -  திருச்சந்தவிருத்தம் - 49

கொண்டை கொண்ட கோதை மீது தேனுலாவு கூனிகூன்
உண்டை கொண்டு அரங்கவோட்டி உள்மகிழ்ந்த நாதன் ஊர்
நண்டை உண்டு நாரை பேர வாளை பாய - நீலமே
அண்டை கொண்டு கெண்டை மேயும் அந்தணீர் அரங்கமே!

(1) கொண்டை கொண்ட கோதை மீது தேனுலாவு கூனிகூன்
உண்டை கொண்டு அரங்கவோட்டி உள்மகிழ்ந்த நாதன் ஊர்

தன் கொண்டையிலே இருக்கும் மாலையின் மேல் வண்டுகள் ரீங்காரமிடும் அலங்காரம் உடைய கூனியின் கூன் உடலினுள் செல்லும் படி உண்டையை வில்லில் வைத்து அடித்து மகிழ்ந்த  இராமன் இருக்கும் ஊர் -  எது?

(2) நண்டை உண்டு நாரை பேர - நண்டை உண்டுவிட்டதால் நகரமுடியால் மெதுவாக நகருவதை சொல்வது
வாளை பாய - அதைக் கண்டு பயந்து விலகும் வாளை மீன்கள்
நீலமே அண்டை கொண்டு கெண்டை மேயும் - நாரை, வாளை ஆகியவற்றை கண்டு பயந்து ஒதுங்கி கருநெய்தல் மலர்கள் நிழலில் ஒதுங்கும் கெண்டை மீன்கள்

அந்தணீர் அரங்கம் - அழகியதாய், அனைவரின் களைப்பையும் தீர்க்கும் நீர்நிலைகள் உடைய பெரிய கோயிலான திருவரங்கம்.

(3) அவ்வளவு தானா?

கூனி - இவ்வுலகில் உள்ள ஜீவன்
கூன் - இந்த சரீரம் தான் நாம் என்று நினைக்கும் குறை  (தேகமே ஆத்ம என்னும் நினைவு - அஹங்காரம் )
உண்டை... நாதன்  - அந்த அகங்காரத்தை விளையாட்டாக போக்கும் எம்பெருமானான இராமன்
ஊர் - அவன் இருக்கும் இடம்

நண்டை உண்ணும் நாரை - உலகவிஷயங்களை போகமாக கொள்ளும் சம்சாரிகள்
அவற்றை கண்டு விலகும் வாளை - சம்சாரிகளை கண்டு பயந்து, ஆனால் தன் முயற்சியால் மோக்ஷமடைய விரும்புபவர்கள்
நீலமே அண்டை கொண்டு கெண்டை மேயும் - மேல சொன்ன இருவரையும் கண்டு பயந்து நீலவண்ணனான  எம்பெருமான் ஒருவனையே புகலாக கொண்டு இருக்கும் ப்ரபன்னர்கள்

அந்தணீர் அரங்கம் - எல்லா தாபங்களையும் தீர்க்கும் (இராமபிரான் இருக்கும்) திருவரங்கம்.

(4) நீலமே அண்டை கொண்டு - கருத்ததாய், மென்மையும், மணமும் கொண்ட மலர் என்பதால், இதுவும் எம்பெருமானின் அழகையே சொல்கிறது. பெரிய பெருமாளின் அழகே அனைவர்க்கும் உபாயமாகவும், அனுபவிக்க தக்கதாயும் இருக்கும்.

ஆகையால் - அழகனூர் அரங்கமே  - அந்தணீர் அரங்கமே!

அரங்கம் என்னும் ஊர்!!

Tuesday, June 20, 2017

அரங்கம் என்னும் ஊர் - Part 3

ஐயப்பாடு அறுத்து, ஆதரம் பெருகின பின் .....

திருநெடுந்தாண்டகம் - 23

உள்ளூறும் சிந்தை நோய் எனக்கே தந்து என் ஒளி வளையும் மாநிறமும் கொண்டார் இங்கே
தெள்ளூறும்  இளந்தெங்கின் தேறல் மாந்திச் சேலுகளும் திருவரங்கம் நம்மூர் என்ன
கள்ளூறும் பைந்துழாய் மாலையானை கனவிடத்தில் யான் காண்பன் கண்டபோது
புள்ளூறும் கள்வா நீ போகேல் என்பன் என்றாலும் இது நமக்கோர் புலவி தானே !!

நித்ய விபூதி லீலா விபூதி என்று எல்லா செல்வங்களையும் உடைய எம்பெருமான் உன்னை (பரகால நாயகியை) கண்டபின் தந்த பரிசு என்ன?

உள்ளூறும் சிந்தை நோய் - நோய் , உடலில் இல்லாத சிந்தை நோய், ஓரிடத்தில் நிற்காமல் பரவும் - ஊரும் சிந்தை நோய், வெளியே தெரியாது உள்ளே இருக்கும் நோய்  - இது தான் அவன் கொடுத்த பரிசு. அவனைப் பிரிந்தால் இப்படி தவிக்கும் பக்தியாகிய பரிசு.

அதோடு  நிற்காமல் "என் ஒளிவளையும் மாநிறமும் கொண்டார்". என்னிடம் அவன் விரும்பியவற்றை எல்லாம் எடுத்து கொண்டு போனான். "உன்னுடைய வளை உன்னுடன் சேர்ந்திருக்கும் போது எவ்வளவு அழகுடையது? உன்நிறம் எவ்வளவு இனிமையானது?" என்று அவற்றை எல்லாம் எடுத்து கொண்டு போய் விட்டான்.

அவன் விரும்பியதாலே இவற்றை "என்னுடையவை" என்கிறாள் பரகால நாயகி.

அப்படி எல்லாவற்றையும் கொண்டு சென்றவன் "எந்த ஊர் என்றாவது கேட்டாயா?" என்று தோழி கேட்க "நான் கேட்பதற்கு முன்னமே அவனே சொன்னான்"

கள்ளூறும் இளந்தெங்கின் தேறல் மாந்திச்  சேலுகளும் திருவரங்கம் நம்மூர்"  - காவிரி ஆற்றில் இருக்கும் மீன்கள் திருவரங்கச் சுனைகளில் சென்று, அங்கு இளம் தென்னைகள் இருந்து சொரியும் கள்ளை பருகி இனிமையாக அங்கேயே வசிக்கும் - சம்சார மண்டலத்தில் இருந்து பரமபதம் செல்லும் முக்தர்கள், இங்கே இருந்த வாசனையே இல்லாமல் எம்பெருமானை அனுபவிப்பது போல்

நம்மூர்  - இது நம்மூர் என்கிறார்கள்.

நம்மூர்  - நமக்கு தேசம் - எல்லாம் தன் பக்தர்களுக்கு என்றிருப்பவனுக்கு எம்மூர் என்றால் இனிக்காது. பரகால நாயகிக்காக உம்மூர் என்றால் அவளுக்கு இனிக்காது.

நாம் இருவருக்கும்   - என்னை காதலனாகவும், உன்னை காதலியாகவும் ஆக்கும் ஊர் நம்மூர்

அரங்கம் என்னும் ஊர் - நம்மூர்!


Sunday, June 18, 2017

அரங்கம் என்னும் ஊர் - Part 2

Context 2

திருமாலை - 16

சூதனாய்க் கள்வனாகி தூர்த்தரோடு இசைந்த காலம்
மாதரார் கயற்கண் என்னும் வலையுள் பட்டு அழுந்துவேனை
போதரே என்று சொல்லி என் புந்தியில் புகுந்து  - தன் பால்
ஆதரம் பெருக வைத்த அழகனூர் அரங்கமன்றே!

சூது - பார்த்துக்கொண்டிருக்கும் போதே ஒருவர் பொருளை அபகரிப்பது
களவு - பிறர் பொருளை தன்னுடையது என்று நினைப்பது

இங்கு எம்பெருமானுடைய சொத்தான ஆத்மாவை தன்னுடையது என்று நினைக்கும் கொடிய செயல்  - களவு

எம்பெருமானே சுவாமி, நாம் அடிமை என்ற நினைப்பெல்லாம் பொய் என்று மயக்கி, மற்றவரை தன்னை போலே நாஸ்திகராய் மாற்றுவது -  சூது (இது இன்றைய காலகட்டத்தில் மிகவும் பொருந்தி இருப்பது). Irrespective of beliefs and principles, objective seems to be to destroy faith!!

திருடப்பட்ட பொருளின் மதிப்பினாலும், திருடப்பட்டவரின் மேன்மையினாலும் பாபமும், தண்டனையும் அதிகரிக்கும். சுள்ளிகளை திருடுவதைவிட, தங்கத்தை திருடுவது அதிக தண்டனை பெற்றுத் தரும். ஒரு சாமான்யனிடம் திருடுவதைவிட அரசனிடம் திருடுவது அதிக தண்டனை பெற்றுத் தரும்.

இங்கே மிக உயர்ந்த வஸ்துவான ஆத்மாவை, சர்வேஸ்வரனான எம்பெருமானிடம் இருந்து திருடினால்....அதை விட கொடியது வேறெதுவும் இல்லை.

மாதரார் கயற்கண் என்னும் வலையுள்பட்டு அழுந்துவேனை - வலையில் மாட்டும் பிராணியை போல், பெண்களின் கண்களில் அகப்பட்டு, மீளமுடியாமல் இருக்கும் என்னை  - இது தாழ்ந்தது என்று விவேகம் அற்று இருக்கும் என்னை பெரிய பெருமாள் மீட்டார்.

எப்படி?

போதரே என்று சொல்லி என் புந்தியில் புகுந்து  - 

ஆழ்வீர் - நீர் எதை ஆசைப்பட்டு இதில் அழுந்தி இருக்கிறீர் என்று பெரிய பெருமாள் கேட்க , "என் ரசிக தன்மையால், நான் கண்ணழிகில் அகப்பட்டு இருக்கிறேன்" என்ன , "நம் கண்ணழகை காட்டி இவரை மீட்போம்" என்று திரையை விலக்கி தன் கண்ணழகை காட்டி நெஞ்சில் புகுந்து  திருத்திக் கொண்டார்!

உயிர்க்கெல்லாம் தாயாய் அளிக்கின்ற தண் தாமரைக்கண்ணன்  - பெரிய திருமொழி 7-1-9

தன் பால் ஆதரம் பெருக வைத்த - மற்ற விஷயங்களில் இருந்த பற்றை அறுத்து , எம்பெருமான் பக்கலில் அன்பு செலுத்தும்படி செய்தான் 

எதைக்காட்டி செய்தான்?

அழகனூர் - தன் திருமேனி அழகை காட்டிச் செய்தான் 

இவருடைய ஐயங்களை அறுத்து, அன்பை வளர்க்க தன் அழகாலேயே செய்து முடித்தான் எம்பெருமான்.

அந்த அழகை காட்டி இவரை திருத்த, தகுந்த சமயத்தை பார்த்து எப்போதும் இருக்கும் இடம் - ஊர்  - அரங்கமன்றே!

சம்சாரிகளுக்கு ருசி பிறக்கும் போது அனுபவிக்க சரியாக இருக்கும் இடம் - ஊர் - அரங்கம் !

அரங்கம் என்னும் ஊர்!

Saturday, June 17, 2017

அரங்கம் என்னும் ஊர் - Part I

Thiruvarangam has a special place in Sri Vaishnava sampradayam. There are numerous references to that in the traditional scriptures by Azhwars which have been further elaborated by acharyas.

Intent of this series is to explore this in a limited fashion using reference to அரங்கம் as ஊர் using different contexts as outlined by acharyas vyakyanam of azhwars divya prabandham.

Context 1 - திருமாலை -15

மெய்யர்க்கே மெய்யனாகும் விதியிலா என்னைப் போலப்
பொய்யர்க்கே பொய்யனாகும் புட்கொடியுடைய கோமான்
உய்யப்போம் உணர்வினார்கட்கு ஒருவன் என்று உணர்ந்த பின்னை
ஐயப்பாடறுத்துத் தோன்றும் அழகனூர் அரங்கமன்றே!

1. பல ஜென்மங்களாக நமக்காகவே நாம் வாழ்வது நிலையான பலனை தருவதில்லை ; அது பொய் என்று உணர்ந்து எம்பெருமானுக்காகவே வாழவேண்டும் என்று எண்ணத் தொடங்குவது மெய். அப்படி தொடங்குபவர்களிடம் ,  எம்பெருமானுக்காகவே வாழும் மஹாத்மாக்களிடம் எப்படி எம்பெருமான் இருப்பானோ, அப்படி ஒரு வித்தியாசமும் இல்லாமல் இருப்பான். அது அவனுடைய மேன்மையை காட்டுகிறது.

2. அப்படியில்லாமல், எம்பெருமானுக்காகவே இருக்க வேண்டும் என்ற எண்ணம் இனி உண்டாகாது என்று இருப்பவர்களுக்கு, எம்பெருமான் இவர்களை கைவிட்டு , அழித்து ( நிக்ரஹம்  செய்து) பொய்யனாகிறான்.

விதியிலா என்னைப் போல  - உலக விஷயங்களில் ஆழ்ந்து எம்பெருமானிடம் ஈடுபடாமல் இருந்தபோது பொய்யனாகவும், அவனிடம் ஈடுபட்டபின் மெய்யனாகவும்  - இப்படி என்விஷயத்திலேயே இரண்டு விதமாகவும் இருந்தான்.

3. உய்யப்போம் உணர்வினார்கட்கு  - இப்படிப்பட்ட பொய் வாழ்க்கையிலிருந்து மீள என்ன வழி என்று சிந்திப்பவர்களுக்கு
பரமாத்வாவான எம்பெருமான் இருக்கிறான் என்ற உணர்வு வந்தபின்;

ஐயப்பாடு அறுத்து தோன்றும்  - பரமாத்மா  ஒருவன் இருக்கிறான் என்று இசையாத போது எல்லா ஐயங்களும் வரும். அவன் இருக்கிறான் என்னும் போது எல்லா ஐயங்களும் அழியும். எப்படி?

அவன் அழகினால் - கண்டவுடன் இவனே பரம்பொருள் என்று எண்ணும்படி தான் இவன் இருப்பது.

ஆனால் அந்த அழகை, அவன் இருக்கும் இருப்பை, பரமபதத்தில் தான் காண முடியுமோ?

அழகனூர் அரங்கமன்றே  - பரமபதம் செல்ல வேண்டியதில்லை. இங்கே , இந்த சம்சாரமண்டலத்திலே திருவரங்கத்தில் காணலாம்! பரமபதம் எம்பெருமான் இந்த ஜகத்தை செங்கோல் செலுத்தும் ராஜசபை என்றால், அவன் தங்கும் அரண்மனையே திருவரங்கம்!

அரங்கம் என்னும் ஊர்

Saturday, January 9, 2016

A brief detour to history - thirumangai Azhwar and pallavas

I chanced upon the "History of the Pallavas of Kanchi" by R, Gopalan, 1928 University of Madras.  This was triggered by revisiting "Sivagamiyin Sabatham". Little did I know that "Thalaivar" would have such a big reference in that text. I did a quick read. The entire book, origins of pallavas, empires, multiple wars and counter views (about how post mamalla, kanchi was attacked again for revenge) is amazing. We have read enough about Thirunaraiyur and the king (early chola) turned nayanmar (Kochengannan) in the naraiyur pathigam of azhwar.

However I picked specific references from Periya Thirumozhi that was spread all over the book on pallavas. Following is a summary

1. Interchangeable use of Thondaimaans and pallavas ... we call Kanchi and surrounding areas as thondaimandalam and the kings who ruled from there are usually pallavas. So historically there is this usage. Has Azhwar supported that....

2-8-10 - மன்னவன் தொண்டையர்கொன் வணங்கும் நீள் முடி மாலை வயிர மேகன் 

This refers to nandivaraman / rashtrakura princess /pallava offspring. In this azhwar confirms rashrakuta background as well in kanchi. Vayiramega is the title of Rashtrakuta Dantidurga. It is believed that he gave his daughter in marriage to Nandivarma pallava and had an alliance against chalukyas.



2. Nandivarman pallavamalla - he ruled for almost 65 years and overlapped a lot with azhwars timeline. He built the paramesvara vinnagaram sannidhi in kanchi. 

Nandivarma pallavamalla also was known as parameswaravarman (family name) pallavamalla. So azhwar called this emperuman koil as parameswara vinnagaram!!

3. We all have heard/read in history classes how mamallapuram was a sea port. interesting point to note that even before Narasimha varma pallavan (who created the actual town), the port facilities were in use. how does azhwar refer to that 

2-6-6 நலங்கொள் நவமணிக் குவையும் சுமந்து எங்கும் நான்றோசிந்து
கலங்கள் இயங்கும் மலை - கடல்மல்லைத் தலசயனத்து .....The place from where ships laden with nava rathnas travel all over the world!

4. seige of nandipura - Nandivarma pallava was laid in seige by an alliance of southern kings (supporting another pallava prince) when he visited nandipura. His able general udayachandra attacked and saved his king.

5-10-7 நந்தி பணி செய்த நகர் நந்திபுர விண்ணகரம் நண்ணு மனமே .... clearly nandivarman either built or did kainkaryam to this emperuman. So nandipura vinnagaram called now days as nathan koil near kumbakonam (apparently this was a fortied area under pallavas)

5. Udayachandra, the general of nandivaraman had many victories including at a  place which is modern day nellore. Reference by azhwar

2-9-8 விடைத் திறல் வில்லவன் நென்மெலியில் வெருவச் செருவேல் வலங்கைப் பிடித்த படைத் திறல் பல்லவர் கோன்
Nenmali - it is probably identical to nelVeli which is the modern day nellore - History of pallavas page 125

6. Pallavan worshipping in srirangam.. 5-8-9  துளங்கு நீண் முடி அரசர் தம் குரிசில் தொண்டை மன்னவன் திண் திறல்  ஒருவர்க்கு... azhwar refers to periya perumal moving this thondaimannavan away from lowkika life by giving him thirumanthram (refer blog http://rangasrinivasan.blogspot.com/2013/11/blog-post_20.html) History of pallavas - This king is possibly  Nandivarman - page 127-128.

,....Interesting point on origin of pallavas... this is a bit vague in history. They were clearly more sanskrit oriented empire compared to other southern empires. But origin is murky. but Sangam works - PerumpaanaRRupadai (uruthirankaNNanaar) states the following legend. Nagapattinam based chola king went to nagalogam and fell in love with the naga princess. When she got pregnant and gave birth to a prince, she was scared and was wondering what to do. Chola king asked her to tie a creeper (தொண்டை  - கொடி) to the baby and throw him into the sea. He promised to give him an land to rule. This baby was predicted to arrive from sea in the land of thiruvenkatam, kanchi and surround areas. This prince became the origin of thondaimandala kings due to this தொண்டை  - கொடி!! This is referred in the vyakyanam for this pasuram.

Monday, December 28, 2015

Pining and suffering - The oracle construct

Separation or the non occurrence of anubhavam with emperuman results in nayaki bhavam. Multiple roles are used in this regard by both the elder and the younger azhwars - தோழி, தாய் , மகள்

These different roles signify the different aspects of underlying philosophy.

தோழி - Makes connection between nayaki and nayakan. This signifies pranavam in thirumanthram which denotes the exclusive servitude of the jeevathmas to paramathma.

தாய்  - Signifies removal or avoidance of self attempts in reaching emperuman - நம patham in thirumanthram

மகள்  - signifies the glories of emperuman explained by the நாராயண patham in thirumanthram  (and why she does not mind self attempts in reaching him)

However this suffering or pining for emperuman is distinguished from the normal worldly suffering and pining using another unique construct of a soothsayer or oracle - கட்டுவிச்சி .

These four modes or bhavams namely தோழி, தாய் , மகள் and கட்டுவிச்சி are used to illustrate these concepts in different ways by both the azhwars. கட்டுவிச்சி is usually a separate persona used by azhwars to highlight either a preferred or abhorred state.

3 examples illustrate this very well. One each from சிறிய திருமடல், திருநெடுந்தாண்டகம், திருவாய்மொழி , the first two for a preferred set of actions and the last one for illustrating abhorred set of actions.

In madal, mother is worried about her daughter's status but overcome by her desperation, she does both suitable and unsuitable things i.e she takes the dust from the feet of srivaishnavas (desirable) to protect her daughter but she prays to other devathas as well (நேராதன ஒன்று நேர்ந்தாள்). Then the elders instruct "mother" to bring in the கட்டுவிச்சி to determine the true cause of daughter's suffering. Before anyone calls her, the Sri Vaishnava கட்டுவிச்சி comes over by herself and determines that the suffering is only due to emperumaan and இது தீரா நோய்.

In Thirunedunthandagam pasuram 11, முதலானாயே என்று அடியேனை படைத்தது இப்பாடுபடுவதற்க்கோ என்று ஆற்றாமையால் பிராட்டி தன்மையை அடைகிறார். When everyone tries various means to cure the nayaki's situation, கட்டுவிச்சி comes on her own without anyone asking and conveys " கடல்வண்ணர் இது செய்தார்!" and only he can take care of it.  Unlike the issues in லௌகீக life where there are many medicines and solution options, love for emperuman needs to get sorted out only by him. Also this is not a disease that will ever go away. ஆசை உடையோர்க்கெல்லாம் அர்த்தங்களை கொடுத்த எம்பெருமானரைப்போல் இக்கட்டுவச்சி தாய்க்கு/நாயகிக்கு  வேண்டிய வார்த்தைகளைச் சொன்னாள்.

Thiruvaaimozhi 4-6 - தீர்ப்பாரை யாமினி pathigam - Here paraangusa nayaki is pining and suffering for emperuman.  Her mother and other elders bring a devathaanthara கட்டுவிச்சி  who is suggesting that her state is due to some devathas and is prescribing rituals to satisfy those devatas. That makes parangusa nayaki to suffer more resulting in தோழி intervening on her behalf to stop mother and other elders from doing this.

சங்கு சக்கரம் என்றிவள் கேட்க இசைக்கிற்றீராகில் .....

இக்கட்டுவிச்சி சொற்கொண்டு நீர் எதுவானும் செய்து அங்கோர் கள்ளும் இறைச்சியும் தூவேன்மின்...

Here it is about removal of such inappropriate and unsuitable actions for a jeevathma.

During the pagal pathu 9th day of the adhyayana utsavam in Srirangam, முத்துக்குறி is enacted by  arayar swami before namperumal. He uses the 11th pasuram of thirunedunthandagam to illustrate azhwar's love for emperumaan and takes the role of தாய் , மகள் and கட்டுவிச்சி.

When the Sri Vaishnava கட்டுவிச்சி comes , she comes in singing as follows:

கண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சி பேர் மல்லைஎன்று மண்டியே திரிவேனை யாரிங்கழைததூஉ !

விண்ணகரம் வெக்கா விரிதிரை நீர் வேங்கடம் மண்ணகரம் மாமாட வேளுக்கை எங்குந்திரிந்து இன்றே மீள்வேனை யாரிங்கழைததூஉ !