Friday, August 28, 2015

மாற்றம் - implications and surrender

மாற்றம் - சொல் , வார்த்தை , மறுமொழி , வேறுபாடு , பகை. These are some of the meanings given in the agarathi. Our worldly usage nowadays is restricted to use of this in the context of  வேறுபாடு / Change.

Similar to the earlier post on இறை , Kaliyan uses this in the context of சொல் , வார்த்தை , மறுமொழி in periya thirumozhi and signs off in spectacular fashion. Lets see how he does this.

First pasuram - thirumozhi - 3-5-9 - thiruvaali

ஓதி ஆயிர நாமமும் பணிந்தேத்தி நின் அடைந்தேற்கு  - ஒரு பொருள்
வேதியா அரையா - உரையாய் ஒரு மாற்றம் எந்தாய்

நீ ஸ்வதந்த்ரனானபடியால் இன்று அனுக்ரஹித்து நாளை நிக்ரஹிக்க கூடும். இப்படி நான் கலங்காமல் இருக்க, "இனி நான் உன்னை பிரியேன் " என்று ஒரு வார்த்தை சொல்ல வேணும். மாசுச: என்று ஒரு நல்வார்த்தை சொல்ல வேணும். ஆழ்வார் எம்பெருமானிடம் வேண்டும் வார்த்தை! - மாற்றம் - சொல் , வார்த்தை

Second pasuram - thirumozhi - 4-8-10 - paarthanpaLLi

பாருள் நல்ல மறையோர் நாங்கை பார்தன்பள்ளிச் செங்கண்மாலை
வார்கொள்  நல்ல முலை மடவாள் பாடலை தாய் மொழிந்த மாற்றம் 

பார்த்தன்பள்ளி எம்பெருமானிடத்தில் பரகாலனாயகிக்கு இருக்கும் ஆசையை, ஈடுபட்டு பேசின பேச்சுக்களையும் தாய் வார்த்தையாக வெளியிடப்பட்ட ஆழ்வாரின் வார்த்தை - மாற்றம் - சொல் , வார்த்தை

third pasuram - thirumozhi - 10-3-7 - ramaavathaaram

மாற்றமாவது இத்தனையே வம்மின் அரக்கருள்ளீர்!
சீற்றம் நும்மேல் தீரவேண்டில் சேவகம் பேசாதே

இராவண சேனையில் உள்ள அரக்கர்களுக்கு ஆழ்வாரின் வாய் வார்த்தை. உங்களுக்கு வேண்டிய நல்வார்த்தையை சொல்கிறேன். வீரவாதம் செய்யாமல், அனுமனுக்கும், வானவர்களுக்கும் பல்லாண்டு பாடுங்கள். இராவணனை போல் இறக்காமல் வாழ்வீர்கள் என்கிறார்.

Now comes the finale - the மறுவார்த்தை !

fourth pasuram - thirumozhi - 11-8-1

மாற்றமுள  - ஆகிலும் சொல்லுவன் - மக்கள்
தோற்றக்குழி - தோற்றுவிப்பாய் கொல்? என்று இன்னம்
ஆற்றங்கரை வாழ் மரம் போல் அஞ்சுகின்றேன்
நாற்றச்சுவை ஊறு ஒலியாகிய நம்பி!

ஜீவாத்மாக்கள் ஏன் இப்படி சம்சாரத்தில் உழல்கிறார்கள். பரமாத்வான நீர் ஏன் பாராமுகமாக உள்ளீர்? இப்படி பல கேள்விகள் கேட்டாலும் , அத்தனைக்கும் மறுமொழி சொல்லக்கூடியவன் அன்றோ இவன்?

எம்பெருமானால் மயர்வற மதிநலம் பெற்ற ஆழ்வார்களும் , எம்பெருமானும் இப்படி வாத பிரதிவாதங்கள் பண்ணினால், அது அளவின்றி செல்வதாலும், அந்த வாத பிரதிவாதங்கள் (பல இருந்தாலும்) இவருடைய (கலியன்) பிறவித் துயர் நீங்குவதற்கு காரணமாகாததாலும் , அதை விட்டு

மாற்றமுள ஆகிலும் சொல்லுவன்  - உன்னை சரணமடையாதவர்கள் போல் மீண்டும் பிறக்க செய்திடுவாயோ என்று அஞ்சுகின்றேன். ஆகையால் உன் அருளே வேண்டும்.

வயலாலி மணாளா  - அடைய அருளாய் எனக்கு உந்தனருளே!

ஆக மாற்றமுளதால் அடியேனுக்கு ஒரு மாற்றம் உரையாய்!

No comments:

Post a Comment