While the underlying focus is always on her longing for her lover and the actions/thoughts to reach him, parakala nayaki conveys many nuances within this theme.
One fine example is the below Thirunedunthandagam pasuram.
முதலில் "என் காதல்" - இது பகவான் என் மேல் கொண்ட காதல் போல் அல்ல. அவன் காதல் கொண்டு பிரிந்த போதும் , "மின்னிலங்கு திருவுருவும் பெரிய தோளும்" என்று இருப்பவன். என் காதல் அப்படியல்ல. "உள்ளூரும் சிந்தை நோயால், என் ஒளியையும் இழந்து , வளையும் இழந்து " ஏங்கி இருப்பவள்.
முன் பாசுரத்தில் வண்டை தூது விட்டபின், மறுபடி பறவையை தூது விடுவானேன்? சீதா பிராட்டியை தேடுவதற்கு நான்கு திசைகளிலும் வானரங்களை அனுப்பியது போல் இவளும் செய்கிறாள். முதலில் தேரழுந்தூருக்கும், இப்போது திருகண்ணபுரம் எம்பெருமானுக்கும் தூது அனுப்புகிறாள்.
உரைத்தியாகில் - ஆகில் - நாரைக்கு கட்டளை இடமுடியாதாகையால், வேண்டுவது . அப்படி தூது சொன்னால், அதுவே பரகால நாயகிக்கு மிகுந்த இன்பம் அளிக்கிறது.
செங்கால மட நாரை - எம்பெருமான் பரகால நாயகியின் காலை கொண்டாடினான் (இதுவன்றோ எழிலாலி - பரகால நாயகியின் கால் இருக்கும் இடமே திருவாலி). பரகால நாயகியோ எம்பெருமானின் திருவடியை நாடுகிறாள். நாரையின் சிகப்பான காலை பார்க்கும் போது எம்பெருமானின் திருவடி நினைவுக்கு வருகிறது. அதை விட சிறப்பாக இருக்கிறது. ஏன் எனில், பகவானின் திருவடி, அதையே கொடுக்கிறது. நாரையின் கால் அழகாக சிவந்திருந்து, பகவானின் திருவடியை நினைவு படுத்துகிறது. மேலும் பகவானின் திருவடியை பெற்று கொடுக்கிறது.
திருகண்ணபுரம் - சில திருநாமங்கள் மற்றவர் சொன்னாலும், சிலர் சொன்னாலே விசேஷமாக இருக்கும். பரகால நாயகி திருகண்ணபுரம் என்று சொன்னால் அது மிக தனிச்சிறப்பு மிக்கது.இது எது போல் - பராசர பட்டர் அழகிய மணவாளன் என்பது போல், அனந்தாழ்வான் திருவேங்கடமுடையான் என்பது போல்!!
என் துணைவர் - எல்லா தசைகளிலும் என்னை ரட்சிப்பவர் ; நான் பிரிந்து மற்றைய உலக விஷயங்களில் முழ்கி இருந்தாலும், என்னை ஆட்கொண்டு, வாழும் படி செய்து, ஈடுபாட்டை ஏற்படுத்தி , இப்போது பிரிந்தாலும் தரிக்கும் படி வைத்திருக்கும் துணைவர்!
பழன மீன் - நாரை தூது சொன்னதற்கு காணிக்கை. நாரை ஆசார்யனை குறிக்கிறது. நாளும் - எப்போதும் - ஒரு முறை செய்த உபகாரத்திற்கு வாழ் நாள் முழுதும் நன்றிக்கடன். எதற்கு மீன்? - ஆசார்யனுக்கு அவர் விரும்பிய பொருளையே தர வேணும் - இங்கே நாரைக்கு மீன் .
உன் பெடையும் நீயும் - நாயகனை வேண்டுபவள் ஆகையால் , நாரையும் தன் பெடையுடன் கூடி மகிழ விரும்புகிறாள்.
இரு நிலத்தில் இன்பம் - பல கஷ்டங்கள் நிறைந்த இந்த சம்சார மண்டலத்தில் இன்பமுடன் குடும்பத்துடன் இருக்கலாம் (வேண்டுவார்க்கு வேண்டியதை ஈந்து)... ஏன்? நித்ய விபூதியில் இந்த சிறப்பு இல்லை - நல்ல பதத்தால் மனை வாழ்வர் என்ற படி !!!

No comments:
Post a Comment