Friday, November 8, 2013

மறப்பும் மறவாமையும்

Both Aazhwars (நம்மாழ்வார் / திருமங்கை ஆழ்வார் ) have commented on how this was resolved for them :-)

"மறப்பும் ஞானமும் நான் ஒன்று உணர்ந்திலன் 
மறக்கும் என்று செந்தாமரை கண்ணோடு
மறப்பற என்னுள்ளே மன்னினான் தன்னை
மறப்பனோ? இனி யான் என் மணியையே" திருவாய்மொழி - 1-10


மறப்பது என்றும், ஞானம் என்றும் இரண்டு உண்டு என்பதையே அறியாமல் இருந்தேன். இப்படிப்பட்ட எனக்கு "மறக்கும்" என்பதால் தன்னுடைய (அசேதனத்தை கூட சேதனமாக்கும் ) அழகோடு மறதி போகும்படி என் மனத்துள்ளே வந்தான், வந்து இருந்தான். அப்படிப்பட்ட அவனை நான் மறப்பனோ !!

விலக்காமை ஒன்றையே காரணமாக கொண்டு .....

""வந்தாய் என் மனம் புகுந்தாய் மன்னி நின்றாய் "  பெரிய திருமொழி - 1-10

"வந்து உனதடியேன் மனம் புகுந்தாய் புகுந்ததற்பின் வணங்கும் " பெரிய திருமொழி - 3-5

ஆழ்வார் தன் அடிமை என்ற ஒரே காரணத்திற்காக வைகுந்த நாட்டையும் , திருவாலி என்ற விசேஷ திவ்ய தேசத்தையும் விட்டு விட்டு ஆழ்வார் மனத்திலே புகுந்து மன்னினான். அப்படி புகுந்த பின்னும் (எதிரிகள் வந்தாலும் ஆசனம் அளிப்பது போல்) ஒப்புக்கு வணங்கினார். 

"மின்னின் மன்னு நுடங்கிடை மடவார் தம் சிந்தை மறந்து வந்து 
நின் மன்னு சேவடிக்கே மறவாமை வைத்தாயால்" பெரிய திருமொழி - 3-5

பெண்களையே நினைவிலேயே  இருந்த ஆழ்வாரை , அந்த சிந்தனை மறந்து, பெருமான் திருவடிகளையே மறவாமல் இருக்கும் நிலையை தந்தான்.

பெருமானே மறவாமை கொடுக்கிறான்!!

ஆனாலும் ஆழ்வார்கள் விஷயத்தில் பகவான் தன் அழகையும், சக்தியையும் ஒரு துளி தான் உபயோகிக்க வேண்டியிருந்தது போலும். ஏனெனில் அடியேனை போல்வார்க்கு அவனின் முழு சக்தியையும் பிரயோகித்து  தான் மறவாமை  ஏற்படுத்த முடியுமோ என்று தோன்றுகிறது :-(

Doubts and Distractions are but the destroyers of all good things!!

Doubts clearly cause second guessing and thus contribute to dilution in conviction particularly in the matter of belief. Distractions however are plenty.... Food, TV, Movies, Books... so on and so forth.

பணியாய் எனக்கு உய்யும் வகை பரஞ்சோதி !!!

1 comment:

  1. Well written swami. You said it right..we can spend another thousand life times analyzing the path...as you had coined it in your earlier blog, it is the causeless mercy - of perumal that will eventually take us to the goal (and nothing else) . So why bother whether path is right or wrong.

    ReplyDelete