Saturday, October 12, 2013

வடிவழகு - The Source?

சில வருடங்களுக்கு முன்னால், திருவாலி சுவாமி ஒருவர் கூறிய ஒரு சம்பவம்.  அவர் ஆமருவியப்பனை சேவிப்பதற்காக தேரழுந்தூர் சென்ற போது நடந்தது. அர்ச்சக சுவாமி இவருக்கு தெரிந்தவர் ஆகையால் மிகவும் விசாரித்திருக்கிறார்.

அர்ச்சகர் - வாங்கோ . எப்படி இருக்கிறீர்? உங்கள் ஆழ்வார் (மங்கை மன்னன்)  எப்படி இருக்கிறார்?

திருவாலி சுவாமி - அவருக்கு என்ன? முகமும் முறுவலுமாக நன்றாக இருக்கிறார் :-)

அர்ச்சகர் - அப்படியா !! அவருக்கு அந்த திருகோலத்தை எப்படி வந்தது என்பதை பாரும் .. ..

இவ்வாறு கூறியபடியே பெருமாள் சேவை நடந்தது.

முதலில் மாமுனிகளின் வடிவழகு சூர்ணிகை

http://www.youtube.com/watch?v=q9RIMuE1UcU

அணைத்த  வேலும் , தொழுத  கையும்
அழுந்திய   திருநாமமும்    ஓமென்ற வாயும்
உயர்ந்த  மூக்கும்  குளிர்ந்த  முகமும்
பரந்த  விழியும்  பதித்த  நெற்றியும்
நெரித்த  புருவமும்  சுருண்ட  குழலும்
வடிந்த  காதும்  அசைந்த  காது காப்பும்
தாழ்ந்த  செவியும்  சரிந்த  கழுத்தும்
அகன்ற  மார்பும்  திரண்ட  தோளும்
நெளிந்த  முதுகும்  குவிந்த  இடையும்
அல்லிக் கயிறும்   அழுந்திய  சீராவும்
தூக்கிய  கருங்கோவையும்  தொங்கலும்  தனி  மாலையும்
தளிரு  மிளிருமாய்  நிற்கின்ற  நிலையும்
சாத்திய  திரு  தண்டையும் சதிரான வீரக்  கழலும்
தஞ்சமான  தாளினையும்      குந்தி  இட்ட  கனைக்காலும்
குளிரவைத்த திருவடி  மலரும்  வாய்த்த  மணங் கொல்லையும்
வயலாலி  மணவாளனும்
வாடினேன்  வாடி  பாடி வாழ்வித்  அருளிய  நீலக்  கலிகன்றி
மருவலர்தம்  உடல்  துணிய வாள் வீசும்   பரகாலன்
மங்கை  மன்னனான   வடிவே !!!

பெரிய திருமொழி 7-5

முதலில் தேரழுந்தூர் எம்பெருமான் , ஆழ்வார் மனம் புகுந்தார் -


அடுத்தது முறுவல்



இவரை பார்ப்பதற்காகவே பரந்த விழி


தொழுத கை



ஆக ஆமருவிஅப்பனே இவரின் வடிவழகை உள்ளிருந்து காட்டுகிறான் என்று கொள்ளலாம்.


1 comment: