Saturday, June 17, 2017

அரங்கம் என்னும் ஊர் - Part I

Thiruvarangam has a special place in Sri Vaishnava sampradayam. There are numerous references to that in the traditional scriptures by Azhwars which have been further elaborated by acharyas.

Intent of this series is to explore this in a limited fashion using reference to அரங்கம் as ஊர் using different contexts as outlined by acharyas vyakyanam of azhwars divya prabandham.

Context 1 - திருமாலை -15

மெய்யர்க்கே மெய்யனாகும் விதியிலா என்னைப் போலப்
பொய்யர்க்கே பொய்யனாகும் புட்கொடியுடைய கோமான்
உய்யப்போம் உணர்வினார்கட்கு ஒருவன் என்று உணர்ந்த பின்னை
ஐயப்பாடறுத்துத் தோன்றும் அழகனூர் அரங்கமன்றே!

1. பல ஜென்மங்களாக நமக்காகவே நாம் வாழ்வது நிலையான பலனை தருவதில்லை ; அது பொய் என்று உணர்ந்து எம்பெருமானுக்காகவே வாழவேண்டும் என்று எண்ணத் தொடங்குவது மெய். அப்படி தொடங்குபவர்களிடம் ,  எம்பெருமானுக்காகவே வாழும் மஹாத்மாக்களிடம் எப்படி எம்பெருமான் இருப்பானோ, அப்படி ஒரு வித்தியாசமும் இல்லாமல் இருப்பான். அது அவனுடைய மேன்மையை காட்டுகிறது.

2. அப்படியில்லாமல், எம்பெருமானுக்காகவே இருக்க வேண்டும் என்ற எண்ணம் இனி உண்டாகாது என்று இருப்பவர்களுக்கு, எம்பெருமான் இவர்களை கைவிட்டு , அழித்து ( நிக்ரஹம்  செய்து) பொய்யனாகிறான்.

விதியிலா என்னைப் போல  - உலக விஷயங்களில் ஆழ்ந்து எம்பெருமானிடம் ஈடுபடாமல் இருந்தபோது பொய்யனாகவும், அவனிடம் ஈடுபட்டபின் மெய்யனாகவும்  - இப்படி என்விஷயத்திலேயே இரண்டு விதமாகவும் இருந்தான்.

3. உய்யப்போம் உணர்வினார்கட்கு  - இப்படிப்பட்ட பொய் வாழ்க்கையிலிருந்து மீள என்ன வழி என்று சிந்திப்பவர்களுக்கு
பரமாத்வாவான எம்பெருமான் இருக்கிறான் என்ற உணர்வு வந்தபின்;

ஐயப்பாடு அறுத்து தோன்றும்  - பரமாத்மா  ஒருவன் இருக்கிறான் என்று இசையாத போது எல்லா ஐயங்களும் வரும். அவன் இருக்கிறான் என்னும் போது எல்லா ஐயங்களும் அழியும். எப்படி?

அவன் அழகினால் - கண்டவுடன் இவனே பரம்பொருள் என்று எண்ணும்படி தான் இவன் இருப்பது.

ஆனால் அந்த அழகை, அவன் இருக்கும் இருப்பை, பரமபதத்தில் தான் காண முடியுமோ?

அழகனூர் அரங்கமன்றே  - பரமபதம் செல்ல வேண்டியதில்லை. இங்கே , இந்த சம்சாரமண்டலத்திலே திருவரங்கத்தில் காணலாம்! பரமபதம் எம்பெருமான் இந்த ஜகத்தை செங்கோல் செலுத்தும் ராஜசபை என்றால், அவன் தங்கும் அரண்மனையே திருவரங்கம்!

அரங்கம் என்னும் ஊர்

5 comments:

  1. Good! அரண்மனையாயினும் இந்த விபூதியிலிருக்கும் 'அரங்கம்' (மேடை), அவன் அந்த 'அரங்க'ராஜா. பூர்வர்கள் இந்த ஊரின் பெயரைத் தமிழ்படுத்தியது கூட இனிமை!

    ReplyDelete
  2. வெறும் அரங்கமன்று திருவாளன் இனிதாக திருக்கண்கள் வளர்கின்ற திருவரங்கம் திரு விளையாடுமிடம்

    ReplyDelete
  3. வெறும் அரங்கமன்று திருவாளன் இனிதாக திருக்கண்கள் வளர்கின்ற திருவரங்கம் திரு விளையாட தோள் சாய்த்த்ள்ளான்.

    ReplyDelete
  4. திருத்தோள்கள் சாய்த்துள்ளான்

    ReplyDelete
  5. திருத்தோள்கள் சாய்த்துள்ளான்

    ReplyDelete